×

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 6 பேர் பலி

வாஷிங்டன்: அமெரி–்க்காவின் கொலோராடோவில் நேற்று முன்தினம் வீடு ஒன்றில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்துள்ளது. இதற்காக ஏராளமானவர்கள் அங்கு திரண்டு இருந்தனர். அப்போது  திடீரென அங்கு நுழைந்த ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டான். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர் தொடர்ந்து தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து  கொண்டான். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பெண் ஒருவரின் காதலன் தான் துப்பாக்கி  சூடு நடத்திய வாலிபர் என தெரியவந்துள்ளது. துப்பாக்கி சூட்டுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். …

The post அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 6 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : US ,Washington ,Colorado, USA ,America ,
× RELATED அதிபர் தேர்தலில் பின்னடைவா?.. டொனால்ட்...