×

கடுமையாக்கப்பட்ட கொரோனா விதிமுறைகள் டாஸ்மாக் பார்களில் 50% விற்பனை சரிவு

சென்னை: கொரோனா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதால் டாஸ்மாக் பார்களில் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளதாக பார் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்கள் உள்ளது. கொரோனா பரவலின் போது இந்த பார்கள் முழுமையாக மூடப்பட்டது. இந்தநிலையில், பார் உரிமையாளர்களின் கோரிக்கையை தொடர்ந்து கடுமையான வழிமுறைகளை பின்பற்றி பார்களை திறக்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி, கடந்த டிசம்பர் 29ம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் பார்கள் திறக்கப்பட்டது. இந்தநிலையில், பார்கள் திறக்கப்பட்ட பிறகு எதிர்பார்த்த அளவிற்கு வாடிக்கையாளர்கள் வராததால் 50 சதவீதம் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதாக பார் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கூறியதாவது: கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக டாஸ்மாக் கடைகளில் 100 சதவீதம் பேர் வந்தால் அதில் 60 சதவீதம் பேராவது டாஸ்மாக் பார்களுக்கு வருவார்கள். ஆனால், தற்போது அரசின் கடுமையான விதிமுறைகள் மூலம் பார்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக, 15 முதல் 20 சதவீதம் பேர் மட்டுமே டாஸ்மாக் பார்களுக்கு வருகிறார்கள். இதன்மூலம் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கு கிடைக்கும் வருவாய் 50 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், பார் உரிமத்தொகை மூலம் மாதந்தோறும் அரசுக்கு ரூ.600 முதல் ரூ.750 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. வியாபாரம் சரிவு ஏற்பட்டுள்ள இந்த சூழலில் அரசு பார் உரிமத்தொகையை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு கூறினார்.

Tags : Corona ,bars ,Tasmac , Tightened Corona rules 50% sales decline at Tasmac bars
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்