×

சட்ட போராட்ட குழு வலியுறுத்தல் அம்மா மினி கிளினிக்குகளில் நிரந்தர டாக்டர்கள்

சென்னை: அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்ற, டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனர். அதில், டாக்டர்களுக்கு மாதத்திற்கு, ₹60 ஆயிரம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசின் அறிவிப்பு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது.

எனவே, மினி கிளினிக்குகள் மட்டுமின்றி, அரசு டாக்டர்கள் எப்போதும் நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும். இதை வலியுறுத்தி, முதல்வர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி வருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Doctors ,Legal Struggle Group Emphasis Mom Permanent ,Mini Clinics , Legal Struggle Group Emphasis Mom Permanent Doctors in Mini Clinics
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை