நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் அதிக பதிவு: ஜனவரி முதல் வாரத்தில் 607 மிமீ மழை பெய்து சாதனை

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு திருப்திகரமாக பெய்து வருகிறது. பல குளங்கள் நிரம்பாவிட்டாலும் மாவட்டத்தின் பிரதான அணைகள் நிரம்பி வழிகின்றன. 2 ஆண்டுகளுக்கு பின்னர் மணிமுத்தாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஜனவரி முதல் வாரத்தில் பெய்த மழையை ஒப்பிடுகையில் அந்த ஆண்டு மிக அதிக அளவு பெய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மாவட்டத்தில் மொத்தமே 3 மிமீ மழை பெய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி முதல்வாரத்தில் 50.40 மழை பெய்துள்ளது. ஆனால் நடப்பு ஆண்டில் புத்தாண்டு பிறந்த பின்னரும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் நேற்று வரை கடந்த ஒரு வாரத்தில் 607.70 மிமீ மழை ெபய்து சாதனை படைத்துள்ளது. இதில் அதிகபட்சமாக பாபநாசம் பகுதியில் மட்டும் 187 மிமீ பெய்துள்ளது. மணிமுத்தாறில் 117.20, அம்பையில் 106.60 மிமீ பெய்துள்ளது.

சேரன்மகாதேவியில் கடந்த 8 நாட்களில் 51.60, நாங்குநேரியில் 40 மிமீ, பாளையில் 37, ராதாபுரத்தில் 44, நெல்லையில் 24 மிமீ மழை பெய்துள்ளது. இன்று காலை 7 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பாபநாசத்தில் 23 மிமீ, ராதாபுரம் 22 மிமீ, பாளை 5.20, நெல்ைல 4, சேரன்மகாதேவி 1, நாங்குநேரி 2 மிமீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் நீர் இருப்பு 142.15, சேர்வலாறு 144.26,  மணிமுத்தாறு நீர் இருப்பு 117.50 அடியாக உள்ளது.

பாபநாசம் அணைக்கு இன்று காலை 2 ஆயிரத்து 61 கனஅடிநீரும், மணிமுத்தாறு  அணைக்கு 642 கனஅடிநீரும் வந்துகொண்டிருக்கிறது. பாபநாசம் அணையில் இருந்து ஆயிரத்து 942 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இதுபோல் மணிமுத்தாறு அணையில் இருந்து இன்று காலை 9 மணியிலிருந்து 200 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனிடையே வருகிற 12ம் தேதிவரை வடகிழக்குப் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories:

>