பட்டுக்கோட்டை அருகே வீட்டுக்குள் திடீர் பள்ளம்

பட்டுக்கோட்டை,: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் விக்ரமம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சோமு (46) விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா. இந்நிலையில் சோமுவின் கூரை வீட்டின் உள்ளே ஒரு இடத்தில் நேற்று திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டது. அப்போது வீட்டில் சோமு, சித்ரா ஆகியோர் இருந்துள்ளனர். உடனே இதை கண்ட சோமு அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து விக்ரமம் கிராம நிர்வாக அலுவலர் மணி மற்றும் வருவாய்த்துறை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த மண்டல துணை வட்டாட்சியர் யுவராஜ், மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரவடிவேல், வீரமணி ஆகியோர் சோமு வீட்டில் திடீரென பள்ளம் ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர். சுமார் 3 அரை அடி அகலத்தில் சுமார் 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து

தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த பள்ளம் எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>