×

கோவிட் 19 தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம்: கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கோவிட் 19 தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவிட் 19 தடுப்பூசி அளிப்பதற்காக ஒத்திகை முகாம் திருவள்ளுர் சுகதார மாவட்டத்தில் திருவள்ளுர் மருத்துவக் கல்லூரி வளாகம், கல்யாணகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகதார நிலைய வளாகம், பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் வானகரம் அப்பலோ மருத்துவமனை வளாகம் ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை முகாம் அமைக்கப்பெற்று ஒவ்வொரு முகாமிலும் 25 நபர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி மருந்து வழங்கும் ஒத்திகை நடைபெற்றது.  ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் காத்திருப்போர் அறை, தடுப்பூசி வழங்கும் அறை, கண்காணிப்பு அறை என 3 பிரிவுகளாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி திட்டம் செயல்படுத்தும் போது ஏற்படும் சவால்களை அடையாளம் கண்டு, அதனை நிவர்த்தி செய்வதே இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும்.

பூந்தமல்லி சுகாதார பகுதி மாவட்டத்தில் ஆவடி அரசு மருத்துவமனை, சோரஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையம், சோழம்பேடு நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், செரீஸ் தனியார் மருத்துவமனை மற்றும் மங்களம் தனியார் மருத்துவமனை ஆகிய மொத்தம் 10 இடங்களில் கோவிட் 19 தடுப்பூசி ஒத்திகை முகாம் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டமாக முன் கள பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதிற்குள் இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் இம்மாவட்டத்தில் 80 அரசு சுகாதார மையங்களில் பணிப்புரியும் 3645 பயனாளிகளுக்கும், 1046 தனியார் மருத்துவமனைகளில் பணிப்புரியும் 18 ஆயிரத்து 177 பயனாளிகளுக்கும், 1718 ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை மைய பணியாளர்கள் 3772 பேருக்கும் முதற்கட்டமாக கோவிட் 19 தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Vaccine Rehearsal Special Camp: Collector Review , Govt 19 Vaccine Rehearsal Special Camp: Collector Review
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...