×

ஏழை பிராமண பூசாரிகளை திருமணம் செய்யும் பெண்களுக்கு 3 லட்ச ரூபாய் அரசு நிதியுதவி : கர்நாடகாவில் அமலாகும் புதிய திட்டம்..!

பெங்களூரு : கர்நாடகாவில் பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பங்களைச் சேர்ந்த பிராமண கோவில் பூசாரிகள் மற்றும் ஏழை மணப்பெண்களுக்காக 2 திட்டங்கள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருந்ததி மற்றும் மைத்ரேய் ஆகிய 2 திருமண திட்டங்களைத் தொடங்க சமீபத்தில் கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியம் அரசிடம் ஒப்புதல் பெற்று உள்ளது.

மைத்ரேய் திட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியாக பலவீனமான பின்னணியில் உள்ள பூசாரிகளை திருமணம் செய்யும் 25 பிராமண பெண்களுக்கு ரூ 3 லட்சம் நிதி பத்திரங்கள் வழங்கப்படும். ரூ .3 லட்சம் முழு பத்திரத்தையும் பெற தம்பதியினர் திருமணமாகி மூன்று வருடங்கள் இணைந்து வாழ வேண்டும்.

அருந்ததி திட்டத்தின் கீழ், சமூகத்தைச் சேர்ந்த பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பங்களைச் சேர்ந்த 550 பெண்களின் திருமணத்திற்கு தலா ரூ 25,000 வழங்கப்படும்.

இந்த திட்டங்கள் குறித்து பேசிய கர்நாடக மாநில பிராமண வாரியத்தின் தலைவர் சச்சிதானந்த மூர்த்தி,
இரண்டு திட்டங்களுக்கான நிதி ஒதுக்குவது குறித்த நடைமுறைகளை மேற்கொண்டுள்ளோம். ஏழை பிராமண பூசாரிகள் மற்றும் பிராமண பெண்கள் 30 வயதுக்கு மேல் பலர் திருமணம் ஆகாமல் இருக்கின்றனர். அவர்களுடைய நல்வாழ்விற்காக இந்த திட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது, என்றார்.


Tags : priests ,women ,Brahmin ,Karnataka , Poor Brahmin Priest, Marriage, Financing, Karnataka
× RELATED தட்டு காணிக்கை கையாடல் விவகாரம்;...