பிரமாண்ட எரிகல் பூமியை தாக்குமா?

வாஷிங்டன்: ‘பாரிஸ் நகரில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவரை விட உயரமான பிரமாண்ட எரிகல், பூமியை நோக்கி படுவேகமாக பாய்ந்து வந்து தாக்கும்,’ என பிரபல எதிர்கால கணிப்பாளர் நாஸ்ட்ரடாமஸ் கூறியது போல் நடக்குமா? என பரபரப்பு நிலவுகிறது.  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் நாஸ்டர்டாமஸ். இவர் ஒரு அபூர்வ ஜோதிடர். எதிர்கால கணிப்பாளர். உலகில் கி.பி. 3797 ஆண்டு வரையில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை முன்கூட்டியே கணித்து கூறியுள்ளார். இவர் 1503ம் ஆண்டு பிறந்து, 1566ம் ஆண்டு இறந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறியுள்ள கணிப்புகள் பெரும்பாலும் அழிவுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டது. அதனால், இவருடைய கணிப்புகளை பார்த்ததுமே, உண்மையிலேயே நடந்து விடுமா என அச்சம் இன்றும் உலகளவில் நிலவுகிறது. இவர் மொத்தம்் 6,338 கணிப்புக்களை கூறியுள்ளார். இவற்றில் 3,797 கணிப்புக்கள் இதுவரை நடந்துள்ளது. சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவும் என்று அவர் கூறிய கணிப்பும் கடந்தாண்டு சரியாக நடந்தது.

தற்போது, இந்தாண்டு தொடக்கத்தில் பூமியை நோக்கி ஈபிள் கோபுரத்தை விட உயரமான மிகப்பெரிய எரிகல் நெருங்கி வந்து தாக்கலாம் என இவர் கணித்துள்ளார். ‘2012 சிஓ 247’ எனப்படும் இந்த எரிகல், ஈபிள் கோபுரத்தை போன்று 0.83 மடங்கு உயரமானது. இது, 74 லட்சம் கிமீ வேகத்தில் பூமியை கடந்து செல்லும் என கூறப்படுகிறது. இது பூமியை தாக்கினால், பெரும் அழிவு ஏற்படும். எனவே, இந்த எரிகல்லை விண்வெளி விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்கு முன்பு, 220 மீட்டர் உயரம் கொண்ட எரிகல், கடந்த புதன் கிழமை 69 லட்சம் கிமீ வேகத்தில் பூமியை கடந்து சென்றது. இது குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், ‘2021 ஏசி எனப்படும் கிசாவின் மிகப் பெரிய பிரமிடை போன்று இருமடங்கு பெரிய அளவிலான எரிகல், புதன்கிழமை பூமியின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்து சென்றது,’ என்று தெரிவித்துள்ளனர். இதுபோன்று பல எரிகற்கள் ஆண்டுக்கு பல முறை பூமியை கடந்து செல்லும். அவை நேரடியாக பூமியை நோக்கி வராதபட்சத்தில் அவற்றை பதிவு செய்வது கடினமாகும். இதுபோன்ற தருணங்களில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Related Stories:

>