×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்த மழையால் தமிழகத்தில் 4,290 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது: ஒரே நாளில் 24 ஏரிகள் நிரம்பின: 438 ஏரிகளில் நீர் இல்லை: பொதுப்பணித்துறை அதிர்ச்சி

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்த மழையால் மாநிலம் முழுவதும் 4,290 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியிருப்பதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த மழை காரணமாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14,139 ஏரிகளில் 4,290 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.‘ என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் 91%முதல் 99% வரை 708 ஏரிகளும், 81 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை 836ம், 71 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை 1340ம், 51 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை 1541ம், 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 2253ம், 1 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை 2773 ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது.

நேற்றுமுன்தினம் பெய்த மழையில் ஒரே நாளில் 24 ஏரிகள் நிரம்பியுள்ளன, நிரம்பாத ஏரிகள்: தர்மபுரி மாவட்டத்தில் 63 ஏரிகளும், திண்டுக்கல்லில் 12ம், ஈரோட்டில் 15ம், கன்னியாகுமரியில் 10ம், கரூரில் 7ம், கிருஷ்ணகிரியில் 29ம், மதுரையில் 21ம், நாமக்கல்லில் 55ம், சேலத்தில் 44ம், தென்காசியில் 25ம், தேனியில் 112ம், திருச்சியில் 68ம், நெல்லையில் 25ம், திருப்பத்தூரில் 23ம், திருப்பூரில் 22ம், வேலூரில் 2 என மொத்தம் 438 ஏரிகளில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை.எனவே, இந்த ஏரிகளில் நீர்வரத்து இல்லாதததற்கு என்ன காரணம் என்று பொதுப்பணித்துறை ஆய்வு செய்து வருகிறது. இதில்,பொதுப்பணித்துறை சார்பில் புனரமைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் சீரமைத்த நிலையில் ஒரு சொட்டு நீர் கூட இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : lakes ,Tamil Nadu ,Public Works Department , Rain, Tamil Nadu, Public Works, shock
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...