பால் கொள்முதல் விலை குறைப்பை கண்டித்து விவசாயிகள் நாளை கே.எம்.எப். முன் போராட்டம்

கோலார்: விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பால் விலையை குறைத்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக மாநில விவசாய சேனா அமைப்பின் சார்பில் நாளை பெங்களூருவில் உள்ள கே.எம்.எப். எதிரில் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில விவசாய சேனா அமைப்பின் கோலார் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோலார் நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடந்தது. இதில் மாவட்டத்தின் அனைத்து தாலுகாவில் இருந்தும் நிர்வாகிகள் வந்து பங்கேற்று ஆலோசனை வழங்கினர். அதை தொடர்ந்து பால் கொள்முதல் விலை குறைத்துள்ள கே.எம்.எப். நிர்வாகத்தின் முடிவை வாபஸ்பெற வலியுறுத்தி பெங்களூருவில் உள்ள கே.எம்.எப். அலுவலகம் எதிரில் ஜனவரி 8ம் தேதி (நாளை) தர்ணா போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>