×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடந்து வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

பெங்களூரு: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெங்களூரு மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கம், பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் வாகன ஓட்டுனர்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை விரிவாக்கம் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதே போல் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் பெங்களூரு நியூதிப்பசந்திரா பகுதியில் சாலை விரிவாக்கம் பணிகளுக்காக சாலையின் ஓரங்களில் கால்வாய் அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. அப்படி தோண்டப்பட்ட பள்ளங்களிலிருந்து எடுக்கப்பட்ட மண் மக்கள் நடந்து செல்லும் பகுதியில் கொட்டி சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், மழை நேரத்தில் மண் கரைந்து சாலையில் வருகிறது. இதில் வாகன ஓட்டுனர்களுக்கு பாதிப்பு ஏற்ப ட்டுகிறது. சாலையில் மண் நிரம்பியுள்ளதால் சாலைகள் மண்சாலை போல் காட்சியளித்து வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து சாலையில் கொட்டியுள்ள மண்ணை அகற்றி வாகனங்கள் எளிதாக செல்ல வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இத்துடன் சாலைகளில் குப்பைகளை கொட்டியுள்ளதால் துர்நாற்றம் வீசி அவ்வழியாக நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குப்பை, கழிவுகளில் சாலையில் கொட்டுவதால் கால்நடைகள் தொல்லையும் அதிகமாகவுள்ளது. இதனால் சாலையில் கொட்டியுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Tags : road , The ongoing road works under the Smart City project should be completed expeditiously: Public demand
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி