நாங்குநேரியில் பராமரிப்பின்றி சேதமடைந்த சிவன் கோயில் சீரமைக்கப்படுமா?.. பக்தர்கள் எதிர்பார்ப்பு

நாங்குநேரி: நாங்குநேரியில் பராமரிப்பின்றி சேதமடைந்த சிவன் கோயில் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் பக்தர்கள் உள்ளனர். நாங்குநேரியில் உள்ள சிவகாமி அம்பாள் சமேத திருநாகேஸ்வரர் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இருப்பினும் முறையான பராமரிப்பில்லா இவ்வாலயம் தற்போது  மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. கும்பாபிஷேகம் நடத்தி ஆண்டுகள் பல ஆனதால் கோயில் கட்டிடங்கள் சிதிலமடைந்து வருகின்றன. அத்துடன் திருப்பணிகள் எதுவும் முழுமையாக நடைபெறாததால் கோயில் வளாகத்தை புதர்கள் ஆக்கிரமித்து மண்டிக் கிடக்கின்றன.

இதனால் அவதிப்படும் பக்தர்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் இக்கோயிலை விரைவில் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த சம்பந்தப்பட்டவர்கள் முன்வருவார்களா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். மேலும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் நிர்வகித்து வரும் நாங்குநேரி வானமாமலை ஜீயரிடம் இக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடத்தி மஹா கும்பாபிஷேகம் மேற்கொள்ள துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை மனு  அளித்துள்ளனர்.

Related Stories:

>