×

ஜனவரி 6, 7ம் தேதிகளில் தமிழக முதல்வர் ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம்

சென்னை: அதிமுக தலைமை கழகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நாளை (6ம் தேதி) மற்றும் நாளை மறுதினம் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்து மக்கள் சந்திக்கிறார். அதன்படி, 6ம் தேதி காலை 9 மணிக்கு பவானியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், 11 மணிக்கு அந்தியூர், அன்று இரவு 9 மணிக்கு கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 7ம்தேதி காலை 10 மணிக்கு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோயில் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டம், மாலை 4 மணிக்கு ஓடாநிலை மற்றும் இரவு 7.30 மணிக்கு பெருந்துறையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசுகிறார். இரண்டு நாட்கள் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி அதிமுகவினர் வரவேற்பு மற்றும் கட்சியினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

Tags : Tamil Nadu ,district ,Chief Minister campaigning ,Erode , Chief Minister of Tamil Nadu will campaign in Erode district on January 6 and 7
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து