கொலை வழக்கில் 3 பேர் கைது

விஜயபுரா: குடிபோதையில் தாபா உரிமையாளரை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயபுரா தாலுகா ரத்தினபுரி கிராஸ் அருகே தாபா நடத்தி வருபவர் மகாதேவப்பா கவுலகி. கடந்த 1ம் தேதி இவருடைய தாபாவுக்கு குடிபோதையில் மூன்று பேர் சாப்பிட வந்தனர். சாப்பிட்டு முடித்தவர்களிடம் மகாதேவப்பா பில் கேட்டபோது எங்களிடமே பில் கேட்கிறாயா என்று கூறி மூன்று பேரும் தாபா உரிமையாளர் மகாதேவப்பாவை சரமாரியாக தாக்கினர். இதில் மகாேதவப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து திக்கோட்டா போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தோஷ் பாண்டுரங்க பஜபலே, சந்தீப் மற்றும் தசரதன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>