×

வடசென்னை பகுதி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

பெரம்பூர்: வடசென்னை பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்  ஆய்வு செய்வதில்லை. இதனால் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெறுவதாக தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஜெபராஜ், சுதாகர் சுந்தரமூர்த்தி மற்றும் ஜெயகோபால் உள்ளிட்ட குழுவினர் நேற்று பெரம்பூர் நெடுஞ்சாலை, பேப்பர் மில்ஸ் ரோடு, மாதவரம் நெடுஞ்சாலை, கொளத்தூர் ஜவஹர் நகர் பகுதி,  சிவ இளங்கோ சாலை, பட்டேல் ரோடு,  ஜிகேஎம் காலனி, எம்கேபி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் சோதனை ேமற்கொண்டனர்.

அப்போது, பல கடைகளில் கலப்பட உணவுப்பொருள் இருப்பதை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ’’பல கடைகளில் செய்தித்தாள்களில் உணவுப் பொருட்களை வைத்து கொடுப்பதால். செய்தித்தாளில் உள்ள மை உணவில் கலந்து விஷ தன்மை  ஏற்படுகிறது. இதுகுறித்து, கடைக்காரர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.


Tags : Food safety officials ,stores ,North Chennai , North Chennai, Department of Food Safety, Research
× RELATED வாக்கு பெட்டி தவறி விழுந்ததில் காவலரின் கை எலும்பு முறிந்தது