×

மைக்கேல் வாகன் சீண்டல்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியா 4-0 என தோல்வி அடையும் என இங்கிலாந்து மாஜி கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருந்தார். ஆனால் முதல் டெஸ்ட்டில் அடைந்த தோல்விக்கு மெல்போர்னில் இந்தியா பதிலடி கொடுத்தது. இந்நிலையில் மீண்டும் வாகன் இந்தியாவை சீண்டி உள்ளார். மெல்போர்ன் மைதானம் இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. இதனால் சுலபமாக வெற்றி பெற்றது.

ஒருவேளை சிட்னியில் இருந்து 3வது டெஸ்ட்டை மெல்போர்னுக்கு மாற்றினால் இந்தியாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஆஸி. அணி கம்பேக் கொடுத்து அடுத்த 2 டெஸ்ட்டிலும் வெற்றிபெற்று 3-1 என தொடரை கைப்பற்றும், என தெரிவித்துள்ளார்.

Tags : Michael Vaughan Schindler , Michael Vaughan Schindler
× RELATED சாம்பியன் பட்டம் வென்றார் கார்லஸ் அல்காரஸ்