ஆங்கில புத்தாண்டையொட்டி அணை பூங்காவில் குவிந்த மக்கள்

கிருஷ்ணகிரி : கொரோனா ஊரடங்கால், அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, கிருஷ்ணகிரி அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், அணை மற்றும் அவதானப்பட்டி படகு இல்லம் திறக்கப்பட்டது. புத்தாண்டையொட்டி, நேற்று கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லத்திற்கு வந்திருந்தனர்.

பூங்காவிற்கு வந்த மக்கள் தங்கள் குழந்தைகளுடன் பூங்காவில் உள்ள சறுக்கு பலகை, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் விளையாடி மகிழ்ந்தனர். அணையின் மேற்புரத்தில் உள்ள மீன் கடைகளிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. படகில் பாதுகாப்பு உடைகளை அணிந்து சுற்றுலா பயணிகள் சவாரி மேற்கொண்டனர். பல மாதங்களுக்கு பிறகு நேற்று பூங்காக்கள், படகு இல்லத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து இருந்தது.

Related Stories:

>