நடிகர்கள் ஆரம்பிக்கும் கட்சிகள் நிலைத்து நிற்காது: அமைச்சர் செல்லூர்ராஜூ பேட்டி

மதுரை: தமிழகத்தில் நடிகர்கள் ஆரம்பிக்கும் கட்சிகள் நிலைத்து நிற்காது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.   ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் செல்லூர் ராஜூ சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர்கள் ஆரம்பிக்கும் கட்சிகள் எல்லாம் நிலைத்து நிற்காது. கமல்ஹாசன் தனியார் டிவி நிகழ்ச்சியில் நடித்து கொண்டிருக்கிறார். 3 நாட்கள் பிரசாரத்திற்கு வருவார். அதன்பிறகு சூட்டிங் சென்று விடுவார். அடுத்து அவரது பட சூட்டிங்கிற்கு சென்று விடுவார். மக்களின் எதிர்பார்ப்பை செய்து கொடுக்க எங்களை போன்ற அரசியல்வாதிகள்தான் இருக்கிறோம். கமல்ஹாசன் போன்றவர்களுக்கு அரசியல் ஒத்து வராது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட கூட்டத்திலேயே, அதிமுகவின் வெற்றிக்கு பாஜ, பாறாங்கல்லை போல ஆதரவு கொடுக்கும் எனக் கூறியுள்ளார். இதனால் பிரதமர், அமித்ஷா உள்ளிட்ட பாஜவை சேர்ந்த அனைவரின் ஆதரவையும் பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். அரசியல் காரணங்களுக்காக முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை பேச்சு எழுந்து வருகிறது. பாஜ, அதிமுகவிற்கு என்றைக்கும் நண்பேன்டா. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More