×

7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

சென்னை: தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் முதன்மை செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதுகுறித்து, தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:
டி.கார்த்திகேயன் (வீட்டு வசதித்துறை செயலாளர்), எஸ்.சுவர்ணா (பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர்), ஆஷீஷ் வச்சானி (கமிஷனர், டெல்லி தமிழ்நாடு இல்லம்), பங்கஜ்குமார் பன்சால் (மின்வாரிய தலைவர்), சத்யபிரதா சாகு (தமிழக தலைமை தேர்தல் அதிகாரி), ஹர்சகாய் மீனா (பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை-பயிற்சி), பீலா ராஜேஷ் (வணிகவரி மற்றும் பதிவு துறை செயலாளர்) ஆகிய 7 பேர் முதன்மை செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : IAS officers , 7 IAS, officers, promotion
× RELATED ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் இடமாற்றம்...