×

மணமக்கள் வீடு உள்ள அலுவலகத்தில் பதிவு செய்யலாம்: திருமணங்கள் பதிவு சட்டத்தில் திருத்தம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2020-2021-ம் ஆண்டு பதிவுத்துறை மானிய கோரிக்கையில், மணமகன் மற்றும் மணமகள் இருப்பிடம் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகங்களிலும் திருமணத்தை பதிவு செய்யும் புதிய வசதியை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு திருமணங்கள் பதிவுசட்டம், 2009-ல் திருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டத்தில் கீழ்கண்ட சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டம், 2009-ன் படி அனைத்து தரப்பினருக்கான திருமணங்களும் கட்டாய பதிவு செய்யப்பட வேண்டும் என்பதனை அனைவரும் பின்பற்றும் விதமாக திருமணம் நடைபெற்ற இடத்தில் உள்ள சார்பதிவகம் மற்றும் மணமக்கள் இருவரின் நிரந்தர வசிப்பிடம் அமைந்துள்ள சார்பதிவகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் திருமண பதிவினை மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Brides ,home office ,Government of Tamil Nadu , Marriages, Registration, Government of Tamil Nadu, Notice
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...