×

கொரோனா இல்லாதவரை அலைக்கழித்த சுகாதார துறை

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகரில் சைக்கிள் பஞ்சர் கடையில் வேலை செய்யும் 35 வயது மதிக்கத்தக்க வாய்பேச முடியாத நபருக்கு நடத்திய பரிசோதனையில் தொற்று இருப்பதாக கூறி ஆலந்தூர் மண்டல 163வது வார்டு சுகாதார  ஆய்வாளர் ரேவதி தலைமையிலான ஊழியர்கள் அந்த நபரை தேடி பஞ்சர் கடைக்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால் பக்கத்து தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது உறவினர்கள் அவருக்கு கொரோனா இல்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட சமயத்தில், அவர் அங்கிருந்து தப்பி ஓடமுயன்றார். இதைக் கண்ட சுகாதார ஊழியர்கள் அந் நபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

பின்னர், ஆதம்பாக்கம் போலீசார் உதவியுடன் அந்த நபரை சிகிச்சைக்காக கிண்டி கிங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்தபின் நெகட்டீவ் சான்றிதழ் கொடுத்து அனுப்பி வைத்தனர். அந்த நபர் நடந்தே வீடு வந்து சேர்ந்தார்.இருப்பினும் அவரை 15 நாள் வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.  


Tags : health department , The health department that waved until the corona was gone
× RELATED இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நிலவி...