ரஜினியின் அறிவிப்பால் ஏமாற்றம் பாஜவுக்குத்தான்.. தமிழக மக்களுக்கு இல்லை :திருமாவளவன் கருத்து

சென்னை:ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள கருத்து:ரஜினியை சில நாட்களுக்கு முன்பு நேரில் சந்தித்து பேசினேன். நீண்ட நேரம் பேசினார். அப்போது அரசியலுக்கு வர எனது உடல் நலம் ஒத்துழைப்பு அளிக்குமா என்பது தெரியவில்லை என்று தெரிவித்தார். நானும் அப்போது அவரது உடல் நிலைதான் முக்கியம் என்று தெரிவித்தேன். உண்மையில் அவருக்கு உடல் நலம் தொடர்பான தயக்கம் இருந்தது. அவருக்கு ஏற்பட்டிருக்கு உயர் ரத்த அழுத்தம் மீண்டும் ஏற்பட்டால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போது அவர் எடுத்திருக்கும் முடிவு நல்ல முடிவு. அவர் தெளிவாக வெளிப்படையாக உண்மையை பேசி இருக்கிறார். அவரது உடல் நலம் முக்கியம். அவர் 100 ஆண்டுகள் வாழ வேண்டும். இது அவரது உடல் நலத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகத்தான் பார்க்க வேண்டும். அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம். ரஜினியில் இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைய போது பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும்தான். அவர்களுக்கு தற்போது பெரிய ஏமாற்றம் கிடைத்துள்ளது. தமிழக மக்களுக்கு இதில் ஏமாற்றம் இல்லை.

Related Stories:

>