கொடைக்கானலில் நடுங்க வைக்கிறது உறைபனி: மக்கள் வீடுகளில் முடக்கம்

கொடைக்கானல்: மலைகளின் இளவரசி என அழைக்கப்படும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், உறைபனி அதிகமாக கொட்ட தொடங்கியுள்ளது. கொடைக்கானல் ஏரி மற்றும்  மலைப்பகுதிகளில் வெண்ணிற கம்பளம் விரித்ததை போல் உறைபனி படர்ந்துள்ளது.

பனிப்போர்வை போர்த்திய கொடைக்கானலை  சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். ஆனால், கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளது. உள்ளூர் மக்கள்  காலையில் தாமதமாக பணிகளை தொடங்கி, மாலையில் விரைவாக  முடித்து விடுகின்றனர். முதியவர்கள் குளிர் தாங்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி விட்டனர். பகலிலும் கம்பளி, ஜெர்கின், ஸ்வெட்டர், மப்ளர்,  கையுறைகள் அணிந்து செல்கின்றனர்.

Related Stories:

>