×

ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் மரணம்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. ரஹ்மானின் தாயார் கரீமா பேகம், சில வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி நேற்று பகலில் அவர் காலமானார். அவருக்கு மகன் ரஹ்மான், மகள்கள் ரெஹானா, பாத்திமா, இஷ்ரத் உள்ளனர். அவரது உடல் நேற்று மாலை கவரபேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘தாயாரின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் ரஹ்மானுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்’ என தெரிவித்துள்ளார். மேலும், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Tags : Death ,AR Rahman , AR Rahman, mother, death
× RELATED ஷகிரா மாதிரி யோசி… பியான்சே போல பாடு!