×

போதையில் போலீசாரின் ரோந்து வாகனத்தை கடத்திய மருத்துவர் கைது

சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் போதையில் போலீசாரின் ரோந்து வாகனத்தை கடத்தி சென்று விபத்தை ஏற்படுத்திய மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான மருத்துவர் முத்துகணேஷ் குன்றத்தூர் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிவருகிறார். ஹாரிங்டன் சாலையில் நள்ளிரவில் போலீஸ் சோதனையில் முத்துகணேஷ் போதையில் வாகனம் ஓட்டி பிடிபட்டார். காரை பறிமுதல் செய்ததால் நடந்துசென்ற முத்துகணேஷ், அங்கே நின்றுகொண்டிருந்த போலீசார் வாகனத்தை கடத்தி சென்றார். போதையில் போலீஸ் வாகனத்தை இயக்கிய முத்துகணேஷ் ஆட்டோ மீது மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.


Tags : Doctor , Doctor arrested for hijacking police patrol vehicle while intoxicated
× RELATED பல்வேறு மாநிலங்களில் திருடி...