×

எங்கள் தலைவரை விமர்சிக்க முதல்வர் பழனிசாமி, அவரது அமைச்சர்களுக்கு தகுதியில்லை: துரைமுருகன் அறிக்கை

சென்னை: திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: “மேடையில் அமர்ந்திருப்பவர்கள் மிட்டா மிராசுகளோ, தொழிலதிபர்களோ இல்லை” என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர். அந்த நிலையையும் கடந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. அ.தி.மு.க. மேடையில்  இருந்தவர்கள் ஊழல்வாதிகள். அதுவும் - வாக்கி டாக்கி ஊழல் - பினாமி கம்பெனிகள் வைத்து அரசு கஜானாவில் ஊழல் செய்தவர்கள் - ரேசன் அரிசியில் ஊழல் செய்தவர்கள்- எல்லாவற்றிற்கும் மேலாக பல்வேறு ஊழல் வழக்குகளில் நீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பவர்கள்.

இது தவிர, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்தவர்கள்தான் ஏன், அவர்களுக்கெல்லாம் தலைவராக மேடையில் நின்று பேசியவர்கள் பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் அதில் பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை டெண்டர் மற்றும் குடிமராமத்து ஊழல் மூலம் பினாமி சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளவர். இன்னொருவர் கரப்ஷன் பணத்தை அமெரிக்க டாலர்களில் வாங்கி - தன் குடும்பத்தின் பெயரிலும், பினாமியின் பெயரிலும் சொத்துக்களை குவித்து - ஊழல் தடுப்புத்துறையின் விசாரணையில் இருப்பவர். ஆகவே அதிமுகவின் “கார்ப்பரேட் அதிபர்கள்” “ஊழல் அதிபர்கள்” “ஊழல் முதலைகள்” தான் மேடையில் இருந்தார்கள் இதுதான்பழனிசாமி தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தில் மக்களுக்குக் காட்டியுள்ள தனது ஆட்சியின் அடையாளம்.

திமுக தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பியிருக்கும் பழனிசாமிக்கு திமுக வரலாறும் தெரியாது - திமுக சாதனைகளும் புரியாது. முதல்வர் மீதும் அதிமுக அமைச்சர்கள் மீதும் முதல்கட்டமாகக் கொடுத்திருக்கின்ற ஊழல் புகார்களுக்கே பழனிசாமி இவ்வளவு பதற்றப்படக்கூடாது. அனைத்து ஊழல் புகார்களும் கொடுக்கப்படும் போது இவருக்குத் தூக்கமே வராது போலிருக்கிறது. அந்த அளவிற்கு ஊழல் மலை மீது அமர்ந்திருக்கும் பழனிசாமிக்கும் - அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் திமுக பற்றியோ எங்கள் கழகத் தலைவர் பற்றியோ விமர்சிக்க என்ன அருகதை இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Palanisamy ,ministers ,Thuraimurugan , Chief Minister Palanisamy, his ministers do not deserve to criticize our leader: Thuraimurugan statement
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...