×

நல்லக்கண்ணு 96வது பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்து

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு நாள், ேக.டி.கே. தங்கமணி நினைவுநாள், மூத்த தலைவர் நல்லக்கண்ணு பிறந்தநாள் என முப்பெரும் விழா தி.நகர் கட்சி அலுவலகம் பாலன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் த.பாண்டியன் வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வர் (எடப்பாடி பழனிச்சாமி) : பிறந்தநாள் காணும் விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லக்கண்ணு நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். துணைமுதல்வர் (ஓ.பன்னீர்செல்வம்): சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லக்கண்ணுக்கு எனது உளம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags : Nallakannu 96th Birthday ,Chief Minister , Nallakannu 96th Birthday: Congratulations to the Chief Minister
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்...