×

சர்வாதிகாரத்துக்கு எதிரான உங்கள் போரில் நானும் உடனிருக்கிறேன்: அமர்த்தியா சென்னுக்கு மம்தா பானர்ஜி கடிதம்

கொல்கத்தா: விஸ்வ பாரதி மத்திய பல்கலைக்கழகத்தால் எழுப்பப்பட்டுள்ள நில அபகரிப்புப் புகாரில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னின் பெயரையும் குறிப்பிட்டு மேற்கு வங்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், புகாரில் தெரிவிக்கப்பட்ட இடத்தில் அமைந்திருக்கும் தனது வீடு, ஒத்திகைக்கான காலாவதி தேதி முடிவதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், யாரை வேண்டுமானாலும் புகார் பட்டியலில் சேர்க்கும் செயலை விஸ்வ பாரதி துணைவேந்தர் செய்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனை குறித்து அமர்த்தியா சென்னுக்கு கடிதம் எழுதியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமீபத்திய நிகழ்வுகளைக் கண்டு அதிர்ச்சியும், கவலையும் அடைந்தேன். சாந்திநிகேதனுடன் இணைத்து புகார்கள் வெளிவந்திருப்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். சாந்திநிகேதனுடன், உங்கள் குடும்பத்துக்கு உள்ள ஆழமான பிணைப்பை நாங்கள் அறிவோம். உங்கள் தாய்வழி பாட்டனாரான ஷிதிமோகன் சென் 80 வருடங்களுக்கு முன்னதாக பிரதிச்சி வீட்டை கட்டியதை நாங்கள் அறிவோம். சில புதிய படையெடுப்பாளர்கள், இப்போது உங்களை நோக்கி ஆதாரமில்லாத புகார்கள் எழுப்பியிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இந்த புகாரின் மீது என் வலியைத் தெரிவிப்பதுடன், சகிப்பின்மைக்கும், சர்வாதிகாரத்துக்கும் எதிரான உங்கள் போரில் நானும் உடனிருக்கிறேன் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னை சகோதரியாக, தோழமையாக நினைத்துக்கொள்ளுங்கள். நாம் இந்த சதியில் இருந்து மீள்வோம் என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவைத் தவிர்த்ததாக முதல்வர் மம்தா பானர்ஜி மீது பாஜக குற்றச்சாட்டு வைத்தது. அதற்கு பதிலளித்த முதல்வர் மம்தா பானர்ஜி தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : dictatorship ,fight ,Mamata Banerjee ,Amartya Sen , Mamta Banerjee
× RELATED சந்தேஷ்காலியில் வெடிபொருள்...