உசிலம்பட்டி பெண் பூசாரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற கிளை ஆணை

மதுரை: உசிலம்பட்டி அருகே பெண் பூசாரி பின்னியக்காளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. நீதிமன்றங்கள் அனுமதி தந்தும் அவற்றை மீறும் வகையில் வருவாய்த்துறை, போலீசார் நடப்பதாக வழக்கு தொடரப்பட்டது. லிங்கநாயக்கப்பட்டி துர்க்கையம்மன் கோயிலில் தங்கள் குடும்பத்தினரே 10 தலைமுறையாக பூசாரியாக உள்ளனர். என் தந்தை இறந்த பின் ஒரே வாரிசான நான் பூசாரி பணியை மேற்கொண்டு வந்தேன் என பின்னியக்காள் மனுதாக்கல் செய்திருந்தார். பெண் என்பதால் கிராமத்தினர் சிலர் பாகுபாடு காட்டி பூசாரி பணியை செய்யவிடாமல் தடுப்பதாக மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related Stories:

More
>