×

மின்சார சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவி செய்யும் மத்திய அரசு: அகில இந்திய மின்கழக தொழிலாளர் நலச்சங்க தலைவர் குற்றச்சாட்டு

பெங்களூரு: மின்சார சட்டத்தில் திருத்தம் செய்வதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மறைமுகமாக மத்திய அரசு உதவி செய்து வருவதாக அகில இந்திய மின் கழக தொழிலாளர் நலச்சங்க தலைவர் சைலேந்திர துபே தெரிவித்தார். கர்நாடக மாநில மின்கழக ஊழியர் சங்கம் சார்பில் பெங்களூருவில் ஏற்பாடு செய்திருந்த மின்சார சட்ட திருத்தத்தின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசும்போது, மத்தியில் பாஜ தலைமையிலான ஆட்சி அமைந்த பின், நல்ல லாபத்தில் இயங்கி வரும் பொது துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறார்.

அந்த வரிசையில் நாடு முழுவதும் இயங்கி வரும் மின்சார கழகங்களையும் தனியார் மயமாக்கும் நோக்கத்தில் புதிய சட்ட திருத்தம் ெகாண்டு வர முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி 48 பக்க கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிரா மாநில முதல்வர் 8 பக்கம் கடிதம் எழுதியுள்ளார். பஞ்சாப், ஹரியானா, கேரளா, டெல்லி மாநில முதல்வர்களும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இன்னும் சில மாநில அரசுகளும் மின்சார சட்டத்தில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டும் என்று கடிதம் எழுதவுள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவெனில் பாஜ ஆளும் மாநிலமான கர்நாடக அரசும் சட்ட திருத்தம் வேண்டாம் என்று கடிதம் எழுதியுள்ளது. இதற்காக முதல்வர் எடியூரப்பாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எழுதியுள்ள சட்டத்தில் மின் வினியோக கழகங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று உறுதி செய்துள்ளார்.

அவரின் சட்டத்தை காற்றில் பறக்கவிடும் வகையில் மத்திய அரசு சட்ட திருத்தம் ெகாண்டுவருகிறது. இது முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவி செய்வதற்காக கொண்டுவந்துள்ள திருத்தமாக இருப்பதால், அனைவரும் எதிர்க்க வேண்டும் என்றார். பாஜ ஆளும் மாநிலமான கர்நாடக அரசும் சட்ட திருத்தம் வேண்டாம் என்று கடிதம் எழுதியுள்ளது. இதற்காக முதல்வர் எடியூரப்பாவுக்கு நன்றி

Tags : government ,corporates ,All India Electricity Workers Union , Central government to help corporates by amending electricity law: All India Electricity Board workers' union leader accused
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...