×

ஏகாதசி விழா: இஸ்கானில் அனுமதியில்லை

பெங்களூரு: பெங்களூரு இஸ்கான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  அதிகாலை 3.45 மணி அளவில் சுவாமி சீனிவாசகோவிந்தாவுக்கு மகா அபிஷேகமும் அதைத்தொடர்ந்து வைகுண்ட வாசலில் நுழையும் நிகழ்வும் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து  காலை 8 மணி, 11.30 மணி மற்றும் மாலை 6.30  மணி அளவில் ஸ்ரீகிருஷ்ணா- ருக்மணி, சத்யபாமா திருமணம் நடைபெறுகின்றன.

இரவு 9 மணி அளவில் இஸ்கான் பெங்களூருவின் மூத்த துணை தலைவர் சஞ்சலபதி தாசா பரமபதா ஏகாதசி குறித்து சிறப்பு விளக்கம் அளிக்கிறார். கொரோனா காரணமாக இஸ்கான் கோவிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, கோவிலில்  நடைபெறும் நிகழ்வுகளை  பக்தர்கள் ஆன்லைனில் (www.iskconbangalore.org) நேரடியாக காண்பதற்கு பெங்களூரு  இஸ்கான் கோவில்  நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Ekadasi Festival ,ISKCON , Ekadasi Festival: Not allowed in ISKCON
× RELATED ஸ்ரீ ரங்கம் கோயிலில் இன்று...