கொரோனா பரவல் காரணமாக இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு ரத்து: இருநாடுகளும் கூட்டாக அறிவிப்பு.!!!

புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக டிசம்பர் இறுதியில் நடைபெற இருந்த இந்த ஆண்டுக்கான இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக இருநாடுகளும் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: டிசம்பர் இறுதியில் நடைபெற இருந்த இந்த ஆண்டுக்கான இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு, கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் இணைந்து, இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்த மாநாடு ரத்து செய்யப்பட்டதற்கு வேறு காரணங்கள் ஏதும் இல்லை. ரஷ்ய அரசின் தூதர் நிகாலோய் குடசேவும் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கோவிட்-19 பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை இரு நாடுகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. அதில் இரு நாடுகளுமே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>