×

தென்காசி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற விஏஓ மீது தாக்குதல் நடத்திய பேர் கைது!: போலீசார் விசாரணை

தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தென்காசி மாவட்டம் ஆணைக்குளம் என்ற கிராமத்தில் அம்மன் குளம் என்ற பகுதியில் உள்ள ஓடையில் அனுமதியின்றி தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் விஏஓ எல்லபாண்டியன், உதவியாளர் ஜேம்ஸ் மற்றும் வருவாய் அலுவலர் மாரியப்பன் ஆகிய 3 பேர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அச்சமயம் அப்பகுதியில் 3 பேர் கொண்ட கும்பல் சட்டவிரோதமாக மணல் எடுத்துள்ளனர். இதனை தடுக்க முயன்றபோது அம்மூவரும் சேர்ந்து விஏஓ மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்து 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மணல் கடத்தல் குறித்து தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுகுனாசிங் எச்சரித்துள்ளார். மேலும் மணல் கடத்தல் குறித்து தனி அலைபேசி எண்: 8610791002க்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தென்காசியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டதுமின்றி அதனை தடுக்க முயன்ற விஏஓ மீது கடத்தல் காரர்கள் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். தற்போது தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : VAO ,sand smuggling ,investigation ,Tenkasi , Tenkasi, sand smuggling, VAO, attack
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!