×

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணையின் 250 பக்க அறிக்கை தயார்..!!

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணையின் 250 பக்க அறிக்கை தயாராகியிருக்கிறது. சித்ரா மரணத்திற்கு வரதட்சணை கொடுமை காரணமில்லை என்று ஆர்.டி.ஓ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக சித்ரா தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் விடுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பதிவு திருமணம் ஆகி இரண்டே மாதத்தில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதால்  சித்ரா மரணம் குறித்து ஆர்.டி.ஓ. தொடர் விசாரணையை மேற்கொண்டது. சித்ரா மரணம் குறித்து கடந்த 10ம் தேதி முதல் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி வந்தார்.

பல கட்டங்களாக இந்த விசாரணை நடைபெற்றது. முதற்கட்டமாக சித்ரா மரணித்த தனியார் விடுதியில் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சித்ராவின் உடல் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. கொலையா? தற்கொலையா? என கணவர் ஹேம்நாத், சித்ராவின் தாய் தந்தையிடம் ஆர்டிஓ விசாரணை நடத்தியது. சித்ராவின் சகோதரி சரஸ்வதி, சகோதரர் சரவணன் அகியோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சித்ராவின் உறவினர்கள், நண்பர்கள், சக நடிகர்கள், சித்ரா கடைசியாக நடித்த படப்பதிவு தளத்தில் இருந்த ஊழியர்கள் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஒரு வார விசாரணைக்கு பின்னர் 250 பக்க அறிக்கையினை ஆர்.டி.ஓ தயார் செய்து தற்போது காவல்துறையிடம் சமர்பிக்கவிருக்கிறார். அதில் சித்ரா மரணத்திற்கு வரதட்சணை கொடுமை காரணமில்லை; வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக சித்ரா தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் அறிக்கை மற்றும் ஆர்.டி.ஓ. அறிக்கையினை ஒப்பிட்டு பார்த்து அடுத்தகட்டமாக விசாரணை நடைபெறவுள்ளது.


Tags : Chitra ,death ,RDO , Actress Chitra, death, RDO investigation, report
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?