×

தீபாவளி லட்சுமி பூஜை லைவ் ஷோ அரசு செலவு செய்தது 6 கோடி: தகவலறியும் சட்டத்தில் அம்பலம்

புதுடெல்லி: தீபாவளி தினத்தன்று லட்சுமி பூஜை நிகழ்ச்சியை லைவ் வீடியோ ஒளிபரப்பிய வகையில் 6 கோடி ஆம் ஆத்மி அரசு செலவிட்டதாக தகவலறியும் உரிமை சட்டத்தில் கேட்டுப் பெற்ற தகவலில் தெரிய வந்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு டெல்லி அக்‌ஷர்தாம் கோயிலில் சிறப்பு லட்சுமி பூஜை நிகழ்ச்சி மற்றும் அதைத் தொடர்ந்து பொது வெளியில் பிரமாண்ட லேசர் ஒளியுடன் கூடிய லைவ் ஷோ நடத்தப்படும் என ஆம் ஆத்மி அரசின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி, கலக்கல் லேசர் லைவ் ஷோவை நடத்திக் காட்டி மக்களிடம் பாராட்டும் பெற்றது. இந்நிலையில், தீபாவளிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட லைவ் ஷோவுக்கு அரசு செலவு செய்த தொகை குறித்த விவரங்களை  டெல்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு நிறுவனத்தில் தகவலறியும் உரிமை சட்டத்தில் சமூக ஆர்வலர் சாகெட் கோகலே என்பவர் கேட்டிருந்தார்.  தகவலில், நவம்பர் 14ம் தேதி தீபாவளி அன்று லேசர் ஷோ லைவ் டெலிகாஸ்ட்டுக்காக, வரி செலுத்திய மக்கள் பணத்தில் இருந்து டெல்லி அரசு 6 கோடி செலவு செய்தது.

முதல்வர் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடனும், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் குடும்பம் மற்றும் உறவினர்களுடனும் கலந்து கொண்ட அந்த 30 நிமிட லட்சுமி பூஜை மற்றும் அதைத் தொடர்ந்த லேசர் ஷோவுக்கு இந்த தொகை செலவிடப்பட்டது. அதாவது ஒரு நிமிடத்திற்கு 20 லட்ச ரூபாய் செலவாகி உள்ளது என பதில் அளிக்கப்பட்டு உள்ளது. தகவலறியும் உரிமையில் கேட்டுப் பெற்ற பதிலை கோகலே தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டு இருந்தார். அதை கவனித்த மாநில காங்கிரஸ் தலைவர் அனில் குமார், ‘‘சம்பளம் வழங்காததை கண்டித்து டாக்டர்களும், நர்ஸ்களும், சுகாதார ஊழியர்களும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நோக்கத்துடன் விளம்பரத்துக்காக இவ்வளவு பெரிய தொகையை முதல்வர் கெஜ்ரிவால் வீணடித்து உள்ளார்’’, என கடுமையாக சாடியுள்ளா

Tags : Deepavali Lakshmi Pooja ,Government , Deepavali Lakshmi Pooja live show Government spent Rs 6 crore: Exposed in Information Act
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...