×

கொரோனா பாதிப்பை கண்டறியும் பணியில் மோப்ப நாய்களை களமிறக்கிய சிலி அரசு!: வியர்வை வாடையை வைத்தே தொற்றை அறியுமாம்..!!

சிலி: கொரோனா வைரஸை அடுத்து, உருமாற்றம் அடைந்த வைரஸும் வேகமாக பரவி வருவதை அடுத்து தொற்று உள்ளவர்களை எளிதில் கண்டறிவதற்காக 4 கால் நண்பர்களின் உதவியை நாடியிருக்கிறது சிலி அரசு. சிலி நாட்டின் சாண்டியாகோ விமான நிலையத்தில் பரபரப்பாக சுற்றி வரும் இந்த மோப்ப நாய்கள் போதைப்பொருளை கண்டுபிடிக்க முயற்சி செய்வதாக நினைத்தால் தவறு. கொரோனா தொற்று உள்ளவர்களை விரைவாக வேறுபடுத்தி கண்டறிவதற்காக இந்த மோப்ப நாய்கள் பிரத்யேக பயற்சி பெற்றவை. கொரோனா கிருமி பாதிப்பு உள்ளோரின் வியர்வையை மோப்பம் பிடிக்கும் நாய்கள், அதிவிரைவாக அவர்களை அடையாளம் காண இவை பயிற்சி பெற்றுள்ளன. இதுகுறித்து சிலி உள்துறை அமைச்சர் ரோட்ரிகோ டெல்காடோ தெரிவித்ததாவது, தென் அமெரிக்க நாடுகளிலேயே முதன்முறையாக சிலியில் கொரோனாவை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நாய்களின் மோப்ப சக்தி குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக இருப்பதாக சான்றளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை அறியும் பணியில் மோப்ப நாய்களை பயன்படுத்தும் 3வது நாடு என்ற பெருமையை சிலி பெற்றிருக்கிறது என குறிப்பிட்டார். நடைமுறைகளில் உள்ள கொரோனா பரிசோதனைகளை விட பன்மடங்கு விரைவாக, நாய்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துவிடுகின்றன. நாய்கள் கண்டுபிடித்தப் பிறகு குறிப்பிட்ட நபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்றினை சிலி சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துகொள்கின்றனர். கொரோனா தொற்றை கண்டறியும் நாய்களால் பெருமளவில் நேரம் மிச்சப்படுத்தப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.


Tags : government ,Chilean , Corona, sniffer dog, Chilean government, sweating
× RELATED ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் சைவ ஆமை...