×

பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் வழங்கிய “Legion Of Merit'விருது உண்மையான அங்கீகாரமாகும் : ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை : பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் வழங்கிய “Legion Of Merit விருது உண்மையான அங்கீகாரமாகும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ.பிரையன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க - இந்திய உறவை மேம்படுத்தியதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘லெஜியன் ஆஃப்  மெரிட்’ என்ற விருதை வழங்கி உள்ளார். இதனை அமெரிக்காவிற்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து, பிரதமர் மோடி சார்பில் வெள்ளை மாளிகையில் விருதை ஏற்றுக்கொண்டார்’ என்று தெரிவித்துள்ளார்.
.
‘லெஜியன் ஆஃப் மெரிட்’ விருது அமெரிக்காவின் சிறந்த மாகாண தலைவர், சர்வதேச சிறந்த தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். உலகளாவிய சக்தியாக இந்தியாவை பிரதமர் மோடி முன்முன்னெடுத்ததற்காகவும், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை மேம்படுத்தியதற்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘லெஜியன் ஆஃப்  மெரிட்’ விருது வாங்கிய பிரதமர் மோடிக்கு துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா, சிறந்த பாராட்டுக்களை அறுவடை செய்து வருகிறது.அமெரிக்க அதிபர் டிரம்ப் வழங்கிய  “Legion Of Merit விருது உண்மையான அங்கீகாரமாகும். பிரதமருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,President ,US , Congratulations to Prime Minister Modi, O. Panneerselvam
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்