×

கல்லீரல், புற்றுநோய் ஏற்பட்டதாக கூறி ஆடிட்டரிடம் ரூ. 1.47 கோடி மோசடி : புனே மருத்துவர் அதிரடி கைது

மும்பை : மகாராஷ்டிராவில் கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட்டதாக கூறி பெண் ஆடிட்டரிடம் 1.47 கோடி ரூபாய் ஏமாற்றிய மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் வசிப்பர் சுஷ்மா ஜாதவ் (58). இவர், பாதுகாப்பு துறையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வனாவடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘வித்யா தனஞ்சய் கோண்ட்ராஸ் என்ற மருத்துவர் எனக்கு கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோய் இருப்பதாக கூறி சிகிச்சை அளித்து 1.47 கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார். ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், டாக்டர் வித்யா தனஞ்சய் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2017ம் ஆண்டு நண்பர் ஒருவரின் மூலம் மருத்துவருக்கு சுஷ்மா ஜாதவ் அறிமுகமாகி உள்ளார். தனக்கு ஏற்பட்டுள்ள உடல் சோர்வு குறித்து மருத்துவரிடம் சுஷ்மா ஆலோசனை பெற்றுள்ளார். அப்போது சுஷ்மாவுக்கு கல்லீரல் நோய் மற்றும் புற்றுநோய் இருப்பதாக கூறி வித்யா சிகிச்சை அளித்துள்ளார். இதற்காக 1.47 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார். ஆனால் அவருக்கு முழங்கால் வலி சிகிச்சை அளித்தது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த சுஷ்மா யாதவ், தன்னை ஏமாற்றிய வித்யா குறித்து பல டாக்டர்களிடம் கேட்டுள்ளார். அவர், கனடாவை மையமாக கொண்டு செயல்படும் ஆயுர்வேத நிலையத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து  1.47 கோடி ரூபாய் மோசடி ெசய்த வித்யா மீது போலீசில் புகார் அளித்தார். தற்போது அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



Tags : auditor ,doctor ,Pune , Liver, Cancer, Fraud, Pune Doctor
× RELATED பொன்னமராவதி அருகே செம்பூதியில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம்