பட்டிவீரன்பட்டி அருகே வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பஸ் மறியல்

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவில் வேகத்தடை அமைக்க கோரி பஸ் மறியல் நடைபெற்றது. சித்தர கோவில் சித்தரேவைச் சேர்ந்த மாயி(60) என்பவர் சித்தரேவு - வத்தலகுண்டு மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த ஊரைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் வத்தலகுண்டு மெயின் ரோட்டில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும், இந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்திம் பஸ் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டிவீரன்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் பஸ்மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின் பஸ் மறியல் கைவிடப்பட்டது. இதனால் இப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories:

>