×

‘டாஸ்மாக்கில் கொட்டிய பணமழை’… தமிழகத்தில் நேற்று ரூ. 428 கோடிக்கு மது விற்பனை : முதலிடத்தில் சென்னை!!

சென்னை : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.428 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று முதல்  மே 24ம் தேதி வரையிலான 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி குவித்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம்(சனிக்கிழமை) தமிழகத்தில் 426 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது.சென்னை மண்டலத்தில் ரூ.100.43 கோடி மது விற்பனையாகிய நிலையில் திருச்சி மண்டலத்தில் ரூ.82.59 கோடி, மதுரையில் சுமார் 87.28 கோடி,கோவை மாவட்டத்தில் சுமார் 76.12 கோடிக்கு மது விற்பனை நடைப்பெற்றது.இதே போல தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று ரூ.428 கோடி மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை ரூ.426.24 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்ட நிலையில் ஞாயிறன்று ரூ.428.69 கோடிக்கு மதுவிற்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.98.96 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.97.62 கோடிக்கு மதுவிற்பனையாகியுள்ளது. கோவை மண்டலத்தில் ரூ.67.89 கோடி, திருச்சி மண்டலத்தில் 87.65 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.76.57 கோடிக்கும் மது விற்கப்பட்டுள்ளது….

The post ‘டாஸ்மாக்கில் கொட்டிய பணமழை’… தமிழகத்தில் நேற்று ரூ. 428 கோடிக்கு மது விற்பனை : முதலிடத்தில் சென்னை!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...