×

பாஜவுடன் மஜத இணைவதாக தலைவர்கள் பேச்சு: கட்சியினருக்கு எடியூரப்பா கட்டுப்பாடு: மஜத கட்சி குறித்து எந்த பேட்டியும் அளிக்க கூடாது என்று அறிவுறுத்தல்

பெங்களூரு: மஜத கட்சி குறித்து  எந்த பேட்டியும் அளிக்கக்கூடாது என பாஜ கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர் எடியூரப்பா கட்டுப்பாடு விதித்துள்ளார்.
கர்நாடக மேலவை தலைவர் மீது பாஜ உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். மேலவை தலைவருக்கு எதிரான தீர்மானத்திற்கு மஜத ஆதரவு அளித்தது. இதற்கு பதில் மேலவை தலைவர் பதவி மஜதவுக்கு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் மஜத மற்றும் பாஜ இடையே கூட்டணி அமைந்துவிட்டதாக பரவலாக பேசப்பட்டது. அத்துடன் பாஜவை சேர்ந்த சிலர் வெளிப்படையாக மஜத தங்கள் கட்சியில் இணைய போகிறது என்று பேசினர். மாஜி முதல்வர் குமாரசாமி இதற்கு விளக்கம் அளித்த நிலையில் முதல்வர் எடியூரப்பா பாஜ நிர்வாகிகள் இனிமேல் மஜத கட்சி குறித்து பேசக்கூடாது எனவும் தடை விதித்துள்ளார்.

இந்நிலையில் பெங்களூருவில் முதல்வர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது: பேரவை தேர்தலுக்கு இன்னும் இரண்டரை வருடம்  இருக்கும் நிலையில் கூட்டணி பற்றி இப்போது பேசவேண்டிய  அவசியம் கிடையாது. எனவே கூட்டணி பற்றி பாஜ நிர்வாகிகள் யாரும் பேசக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாஜி பிரதமர் தேவகவுடாவின் தீவிர முயற்சியால் மஜத  வளர்ச்சி அடைந்துள்ளது. அக்கட்சி நமது கட்சியுடன் இணையப்போகிறது என பேசப்படுவதால் அக்கட்சியின் மாநில தலைவர் எச்கே குமாரசாமி, மாஜி முதல்வர் எச்டி குமாரசாமி ஆகியோருக்கு அவமானமாகும்.  எனவே, பாஜவினர்  யாரும் இதுபற்றி பேசக்கூடாது.

ஒரு அரசியல் கட்சியான  மஜத எப்படி நமது கட்சியுடன் இணையமுடியும்? மேலவை தலைவர் பிரதாப் சந்திர ஷெட்டியை தலைவர் பதவியில் இருந்து கீழே இறக்க வேண்டும் என நோட்டீஸ் அளித்த நிலையில் நமது தீர்மானத்திற்கு மஜதவின் ஆதரவு கிடைத்தது. இந்த ஒரு காரணத்தை முன்னிட்டு பாஜவுடன் மஜத இணைகிறது என கேட்பது சரி அல்ல’’ என்றார். மாநில பாஜ துணை தலைவர் அரவிந்த் லிம்பாவளி பாஜவுடன் மஜத இணைய இருப்பதாக கூறினார். அரவிந்த் லிம்பாவளியின் பேச்சை தொடர்ந்து பாஜவுடன் மஜத இணையபோகிறதா? என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக  பேசப்பட்டு வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

கூட்டணி இல்லை
டெல்லியில் கர்நாடக மாநில பாஜ மேலிட பொறுப்பாளர் அருண்சிங் செய்தியாளர்களிடம் கூறும்ேபாது,  கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா கட்சி பாஜவுடன் இணைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி வருகிறது. இதுவும் பெய்யான செய்தியே. அப்படி எந்த திட்டமும் தற்போது இல்லை. கர்நாடகாவில் பாஜ பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. ஆகவே மஜத உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அவசியமில்லை. நிர்வாக ரீதியில் ஏற்படும் சில தேவைகளுக்கு தார்மீக அடிப்படையில் மஜதவின் ஆதரவு ெபறுகிறோம். அக்கட்சியை பாஜவில் இணைப்பதோ அல்லது கூட்டணி அமைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.


Tags : party ,Majatha ,Eduyurappa ,BJP , BJP
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்...