×

வேதாரண்யம் பகுதிகளில் பயிர்களை சேதமாக்கும் எலிகளை பிடிக்க கிட்டிப்பொறி

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதிகளில் நெற்பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை கூலி ஆட்கள் மூலம் கிட்டிப்பொறி வைத்து பிடிக்கின்றனர்.நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் 24,000 ஹெக்டேர் நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்கள் தற்போது பெய்த மழை காரணமாக தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம், மருதூர் வடக்கு, கரியப்பட்டினம் , நெய்விளக்கு, தென்னம் புலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நெற்பயிர்களை சேதப்படுத்தும் எலிகளை விவசாயிகள் கிட்டிப்பொறி வைத்து பிடித்து வருகின்றனர்.

முன்பெல்லாம் வயல்களில் எலி பேஸ்ட் மற்றும் உணவு பொருட்களில் விஷம் கலந்து வைத்து எலிகளை அழிப்பார்கள். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். ஆனால் தற்போது இயற்கை முறையில் மூங்கிலால் செய்யப்பட்ட கிட்டிகளை வைத்து அதன் உள்ளே உணவு பொருட்களை வைத்து மாலை வேலைகளில் வயல்களில் வைத்து விடுகிறனர். இரவில் உணவு தேடி வெளியில் வரும் எலிகள் இந்த கிட்டிகளில் மாட்டி இறந்து விடுகின்றனர். தற்போது எலி பிடிக்கும் பணியில் உள்ளூர் மற்றும் ஆந்திராவில் இருந்து நரிக்குறவர்கள் ஈடுபடுகின்றனர். ஒரு கிட்டி வைப்பதற்கு கூலியாக 7 ரூபாய் பெறுகின்றனர். ஒரு ஏக்கருக்கு 100 முதல் 200 கிட்டிகள் வரை வைக்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 எலிகளை பிடித்து வருகின்றனர். இதனால் சம்பா சாகுபடியில் நெல் சேதம் தடுக்கப்படுகிறது. இந்த எலிகளின் தாக்கம் தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் ஏக்கருக்கு 5 முதல் 6 மூட்டை நெல் வீணாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.ஒருபுறம் தொடர் மழையால் பயிர்கள் சேதம் அடைந்து வரும் நிலையில் மறுபுறம் விளைந்து வரும் நெற்பயிர்களை எலிகள் சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தண்ணீர் நிறைந்த பகுதிகளில் இருந்து மேடான பகுதிகளுக்கு எலிகள் இடம் பெயர்வது வழக்கம். இவ்வாறு ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு அதிகப்ப டியாக இடம்பெயரும் எலிகள் மேடான பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை கடித்து சேதமாக்கும். இந்த எலிகளை கிட்டி வைத்து பிடிக்கும் இயற்கையான முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Kitty ,areas ,Vedaranyam , Kitty trap to catch rats damaging crops in Vedaranyam areas
× RELATED சென்னையிலும் வருகிறது பசுமை பந்தல்!