×

அரசியலில் ஆணாதிக்க மனப்பான்மை உள்ளது : நடிகை ஊர்மிளா பேட்டி

மும்பை, :-பாலிவுட் நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஊர்மிளா மாடோண்ட்கர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ேதாற்றார். கடந்த சில வாரங்களுக்கு முன் இவர் சிவசேனாவில் இணைந்தார். இவருக்கு எம்எல்சி பதவியும் வழங்கப்பட்டது. கடந்தாண்டு காஷ்மீரை சேர்ந்த தொழிலதிபர் மொஹ்சின் அக்தர் மிர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பிறகு ஊர்மிளா இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார் என்றும் விரைவில் தனது பெயரை ‘மரியம் அக்தர் மிர்’ என்று மாற்றப்போவதாக கூறப்பட்டது.

இதனையடுத்து ஊர்மிளா சமூக வலைத்தளங்களில் கடுமையாக ‘ட்ரோல்’ செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றில் உரையாடிய ஊர்மிளா, ‘எனது கணவர் மொஹ்சின் அக்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான தொடர்ச்சியான வெறுப்பு தாக்குதல்கள் நடைபெறுவது துரதிர்ஷ்டவசமானது. எனது கணவர் ஒரு தீவிரவாதி என்றும் பாகிஸ்தானியர் என்றும் கூறுகின்றனர். எல்லைமீறி வெறுப்புணர்வை கொட்டுகின்றனர். என் தாயின் பெயரை ருக்ஷனா அகமது என்றும், தந்தையின் பெயர் சிவிந்தர் சிங் என்று குறிப்பிட்டு இணையங்களில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

என் கணவர் ஒரு முஸ்லிம் மட்டுமல்ல, ஒரு காஷ்மீர் முஸ்லிம். நாங்கள் இருவரும் எங்கள் மதங்களை சமமான வழியில் பின்பற்றுகிறோம். அரசியல் உலகில் பெண்கள் எளிதில் குறிவைக்கப்படுகிறார்கள். பெண்கள் உட்பட அனைவருக்கும் அரசியல் விஷமாக மாறிவிட்டது. இது, நான் அரசியலில் சேரும்போதே நன்றாக தெரியும். அரசியலில் பெண்களுக்கு பாகுபாடு உள்ளது. ஆனால் அவர்கள் மக்களுக்காக உழைக்க தயாராக உள்ளனர். எதிர்மறையான கருத்துக்களால் என்னிடம் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பூ, திரிணாமுல் காங்கிரஸ் எம்பியும் நடிகையுமான நுஸ்ரத் ஜஹான் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது குஷ்பு பேசுகையில், ‘சினிமாவை விட அரசியலில் ஆணாதிக்க மனப்பான்மை இருப்பதாக நான் நம்புகிறேன். பெண் கலைஞர்கள் அரசியல் துறைக்கு வருவது கடினம்’ என்றார். தொடர்ந்து நுஸ்ரத் ஜஹான் கூறுகையில், ‘நான் அரசியல் உலகிற்கு வந்தபோது, என்னை பற்றி சிலர் பலவிதமாக பேசினர். ஆனால் மக்களின் விருப்பத்தால் நடிப்பு உலகில் இருந்து அரசியலுக்கு வந்ேதன். நடிகைகள் மற்றும் அவரது குடும்பத்தினர் இணையத்தில் குறிவைக்கப்படுவது கவலைக்குரியது’ என்றார்.

Tags : Urmila , Politics, Actress Urmila, Interview
× RELATED அவன் தம்பி