×

கிராமப்புற கோயில் திருப்பணி செய்யும் ரூ.1 லட்சத்துக்கு ஜிஎஸ்டி வசூல் கூடாது: கோயில் பூசாரிகள் நலச்சங்கம் தீர்மானம்

சென்னை: கோயில் பூசாரிகள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் வாசு, மாநில செயலாளர் சங்கர், திருவள்ளூர் மாவட்ட தலைவர் பார்த்திபன் உட்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* தமிழக அரசு 17 நல வாரியங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், கிராம கோயில் பூசாரிகள் நல வாரியம் மட்டும் ஆறு ஆண்டுகளாக செயல்படவில்லை. பூசாரிகள் நலவாரியத்தை செயல்படுத்த வேண்டும்.
* ஆதி திராவிடர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பகுதியில் உள்ள கோயில்களுக்கு பெரிய கோயில்களில் உள்ள உபரி நிதியில் இருந்து ஆண்டுக்கு 1000 கோயில்களுக்கு கிராமப்புற திருப்பணி நிதி ஒரு லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்து வருவதை தடுக்க முயற்சி நடந்து வருகிறது.  
* கிராமப்புற திருப்பணி நிதி வழங்கப்படும் ₹1 லட்சம் நிதி உதவியில் இருந்து மத்திய, மாநில அரசுகள் ஜிஎஸ்டி பிடித்தம் செய்வதை தடை செய்ய வேண்டும்
* திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் அம்மன் கோயிலுக்கு தானமாக வரும் மாடுகளை பூசாரிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tags : Temple Priests' Union , GST should not be levied on Rs 1 lakh for rural temple renovations: Temple Priests' Union
× RELATED பூசாரிகளின் வாழ்வில் புத்துணர்வை...