×

அமமுக சார்பில் எம்ஜிஆர் நினைவுநாள் விழா

சென்னை: வரும் 24ம் தேதி அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் எம்ஜிஆர் 33வது நினைவுநாள் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து அமமுக வெளியிட்டுள்ள அறிவிப்பு:எம்ஜிஆரின் 33வது நினைவு நாள் வரும் 24ம் தேதி (வியாழக்கிழமை)  கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு,  மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், டிடிவி.தினகரன் தலைமையில் மரியாதை  செலுத்தப்படுகிறது. இதில் அனைவரும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : MGR Memorial Ceremony ,Ammuka , MGR 33rd Remembrance Day is being celebrated on the 24th under the leadership of AIADMK General Secretary DTV Dinakaran.
× RELATED வாழப்பாடியில் ரூ.16 லட்சம் பறிமுதல்..!!