தங்கம் கடத்திய 3 பேர் கைது

சென்னை: துபாயிலிருந்து   மீட்பு விமானம் நேற்று வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் வாசித் (34), சகுபார் சாதிக் (37), சென்னையை சேர்ந்த  ராவுத்தர் (44) ஆகிய 3 பயணிகளை சந்தேகத்தில் நிறுத்தி சோதனையிட்டனர். அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்க பேஸ்ட்கள், தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 3 பேரிடமிருந்தும் ரூ.49.6 லட்சம் மதிப்புடைய  962  கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தனர்.

Related Stories:

>