கொரோனா காலத்தில் திணிக்கப்பட்ட வணிகர் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: கொரோனா பேரிடர் காலத்தில், பேரிடர் கால சட்டங்களைச் சுட்டிக்காட்டி பல்வேறு வழக்குகள் வணிகர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன. இவ்வழக்குகளை தமிழக அரசு எந்தவித நிபந்தனையும் இன்றி விலக்கி கொள்ள வேண்டும். அபராதத்தொகை விதிப்பை ரத்து செய்ய வேண்டும். பேரிடர் காலத்தில் முடக்கப்பட்டு, இடம்மாற்றம் செய்யப்பட்ட, குறிப்பாக கோயம்பேடு பூ மார்க்கெட் இதுவரை மீண்டும் கோயம்பேட்டிலேயே திறக்க, காலதாமதம் செய்து கொண்டிருப்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. பூ மார்க்கெட் திறப்பு சம்பந்தமாக சிறப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு 18ம் தேதி (இன்று) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>