×

மஜத கட்சி குறித்து பேச வேண்டாம்: மேலவை உறுப்பினர் எச்.விஷ்வநாத் அதிருப்தி

மைசூரு: யார் மிட்டாய் கொடுக்கிறார்களோ அவர்களிடம் செல்லும் குழந்தை மாதிரி மேலவை தேர்தலில் நடந்து கொண்ட மஜத குறித்து பேச வேண்டாம் என்று மேலவை உறுப்பினர் எச்.விஷ்வநாத் தெரிவித்தார். மைசூருவில் செய்தியாளர்களிடம் மேலவை உறுப்பினர் எச்.விஷ்வநாத் கூறுகையில், மேலவை தலைவர் பதவி விவகாரத்தில் மஜத மிட்டாய்க்கு ஆசைப்படும் குழந்தை போல் நடந்து கொண்டது. பாஜவுக்கும் காங்கிரசுக்கும் இடையே மஜத ஒரு குழந்தை மாதிரி. யார் மிட்டாய் தருகிறார்களோ அவர்களிடம் செல்லும் மஜதவை பற்றி பேச வேண்டாம். மேலவையில் நடந்த கலவரத்தின்போது மேலவையின் கதவுகளை செருப்பு காலால் உதைத்தனர்.

மேலவைக்கு என்று ஒரு கவுரவம் உள்ளது. மேலவையில் நடந்த இந்த சம்பவத்தை வேதனையோடு பார்க்க நேர்ந்தது. மக்கள் சட்டத்தை யார் மதிக்கவில்லையோ அவர்களே மேலவையில் இதுபோன்ற அடிதடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். சட்டமன்றத்தை நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து உருவாக்கினோம். சட்டமன்றத்தை நாங்கள் தெய்வமாக மதிக்கிறோம். பிரதமர் நரேந்திரமோடி பாராளுமன்றத்திற்கு சென்றபோது பாராளுமன்றத்திற்கு முன் விழுந்து வணங்கிவிட்டு உள்ளே சென்றார். பேரவை, மேலவையில் நடக்கும் விவகாரங்களை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். தற்போது மேலவையில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

Tags : H. Vishwanath ,party ,Majatha ,Upper House , Don't talk about Majatha party: Upper House member H. Vishwanath dissatisfied
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்...