×

கட்டிய 5 ஆண்டுகளில் மஞ்சக்கொல்லை வைகை ஆற்றுப் பாலம் சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

பரமக்குடி: பரமக்குடி அருகே மஞ்சக்கொல்லை வைகை ஆற்று பாலம் சேதம் அடைந்துள்ளதால், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பரமக்குடி அருகே உள்ள நயினார்கோயில் ஒன்றியத்தை இணைக்கும் விதமாக, பாண்டியூர் ரோட்டில் இருந்து மஞ்சக்கொல்லை வைகை ஆற்றின் குருக்கே பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டி ஐந்து ஆண்டுகளான நிலையில், எந்த விதமான பராமரிப்பு இல்லாததால், முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. விவசாயிகள் விளை பொருள்களை பரமக்குடி நகர் பகுதிக்கு கொண்டு வரவசதியாகவும், போக்குவரத்து செலவுகளை குறைப்பதற்காகவும் பாலம் அமைக்கப்பட்டது.

ஆனால் அமைக்கப்பட்ட பின்,மேலும், பாலத்தின் இரு கரையிலும் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பாலத்தின் முகப்பு மற்றும் கடைசி பகுதியில் மழை நீரால் அரிக்கப்பட்டு, முற்றிலும் சேதமடைந்து சாலைக்கும் பாலத்திற்கும் இடையில் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பாதசாரிகளும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் பாலத்தை சீரமைத்து கருவேல மரங்களை அகற்றி, சீரான போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,Yellowstone Vaigai River Bridge , Damage to the Yellowstone Vaigai River Bridge in 5 years of construction: Motorists suffer
× RELATED வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை வீடியோ...