×

லாஸ்பேட்டை பகுதிகளில் போஸ்டர் ஒட்டி வழிப்பறி ஆசாமிகளை தேடும் போலீஸ்

புதுச்சேரி: லாஸ்பேட்டை பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டி வழிப்பறி ஆசாமிகளை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி லாஸ்பேட்டையில் கடந்த 2 மாதத்தில் அடுத்தடுத்து பெண்களிடம் நகை வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றன. தலைமை செயலக அதிகாரியை தாக்கி அவரது மனைவியிடம் நகை பறித்த சம்பவத்தையடுத்து அங்கு டிஜிபி உத்தரவுக்கிணங்க ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட்டன. அதன்பிறகு லாஸ்பேட்டையில் வழிப்பறி நடைபெறாத நிலையில், தொடர்ச்சியாக நடந்த இச்சம்பவத்தில் ஒரே ஆசாமிகளே கைவரிசை காட்டியது காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து வழிப்பறி ஆசாமிகளின் படங்களை, ஓவியர்களின் உதவியுடன் வரைந்த போலீசார் அவற்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு தேடுதலில் ஈடுபட்டனர். ஆனால் எந்த துப்பும் கிடைக்காத நிலையில், தற்போது வழிப்பறி ஆசாமிகளின் வரைபடம் அடங்கிய போஸ்டர்களை அச்சிட்டு அவற்றை லாஸ்பேட்டை பகுதி முழுவதும் போலீசார் ஒட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். மேலும் இதுபோன்ற முகதோற்றம் உடைய நபர்கள் யாரேனும் தெரியவந்தால் உடனே தங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Laspet ,area , Police search posters in Laspet area
× RELATED கோவையில் யானை மந்தைகளுடன் குட்டியானையை சேர்க்க முயற்சி!!